/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு மனைவி, கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்' ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு மனைவி, கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு மனைவி, கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு மனைவி, கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு மனைவி, கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
ADDED : ஜூலை 10, 2024 11:59 PM
கோபி:ஈரோடு மாவட்டம், கோபி, கோட்டுப்புள்ளாம்பாளையம் அருகே மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார், 30, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இந்துமதி, 26. இவர்களுக்கு மகன் உள்ளார். கடந்த, 2020ல், அதே பகுதியில் உள்ள பள்ளத்தில், சாக்கு மூட்டையில் தலையில் பலத்த காயங்களுடன், குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து குமாரின் தந்தை பழனிசாமி கொடுத்த புகாரின்படி, நம்பியூர் போலீசார் விசாரணை செய்தனர்.
அதில், கோபி அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர், 28, என்பவருக்கும், இந்துமதிக்கும் இருந்த கள்ளக்காதலை கண்டித்த குமாரை, அவர்கள் இருவரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை செய்து, சாக்கில் அடைத்து, பள்ளத்தில் வீசியதும் தெரிந்தது.
இதையடுத்து கொலை வழக்கில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, கோபி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தயாநிதி, கொலையில் தொடர்புடைய இந்துமதி, ஸ்ரீதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா, 12,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.