/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சின்னக்கரை ஓடைக்கு நீர் கிராம மக்கள் கோரிக்கை சின்னக்கரை ஓடைக்கு நீர் கிராம மக்கள் கோரிக்கை
சின்னக்கரை ஓடைக்கு நீர் கிராம மக்கள் கோரிக்கை
சின்னக்கரை ஓடைக்கு நீர் கிராம மக்கள் கோரிக்கை
சின்னக்கரை ஓடைக்கு நீர் கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2024 01:47 AM
தாராபுரம் : அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, பிரதான வாய்க்கால் மூலம், சின்னக்கரை ஓடைக்கு விட, மக்கள் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சின்னபுத்துார், பெரிய புத்துார் மற்றும் சகுனிபா-ளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 15க்கும் மேற்பட்டோர், தாராபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சின்னப்புத்துார், பெரியபுத்துார், குருப்ப நாயக்கன்பாளையம், வெங்கிட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தடுப்பணை மற்றும் குளங்கள் உள்ளன. அமராவதி அணை நிரம்பி உபரி நீரை திறக்கும்போது, அமராவதி பிரதான வாய்க்கால் மூலம், எங்கள் பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பி, மீண்டும் உபரி நீர் அமராவதி ஆற்றில் கலந்து விடும். எனவே மக்களின் தண்ணீர் தேவை கருதி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,