Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொடுமுடியில் அகற்றப்படாத ஆக்கிரமிப்பு: நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர முடிவு

கொடுமுடியில் அகற்றப்படாத ஆக்கிரமிப்பு: நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர முடிவு

கொடுமுடியில் அகற்றப்படாத ஆக்கிரமிப்பு: நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர முடிவு

கொடுமுடியில் அகற்றப்படாத ஆக்கிரமிப்பு: நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர முடிவு

ADDED : ஜூலை 08, 2024 07:09 AM


Google News
கொடுமுடி : கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவில், இந்திய அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக, பரிகார ஸ்தலமாக திகழ்கிறது. கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் கொடுமுடி பேரூராட்சி பராமரிப்பில் உள்ள நகர சாலைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.

இதனால் சாலை அகலம் குறைந்து பள்ளி வாகனங்கள், ஆம்-புலன்ஸ் மற்றும் தீயணப்பு வாகனம் உள்ளிட்ட ஆபத்து கால வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கோவி-லுக்கு வந்து செல்லும் பல்வேறு பகுதி பக்தர்களும் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள், பொது-நல அமைப்புகள் மற்றும் சமூகநல ஆர்வலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கொடுமுடி காவிரி ஆறு மற்றும் புகளூரான் வாய்க்கால் கரைகளில், சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆனால் பெயரளவுக்கே நடந்ததால் முழுமையான தீர்வு கிடைக்காமல் மக்கள் அவதி தொடர்கிறது.

இதனிடையே உயர் நீதிமன்றத்தில், கொடுமுடி சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியம் தொடர்ந்த வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு அடங்கிய பெஞ்ச், 90 நாட்களுக்குள் சாலை ஆக்கிரமிப்-புகளை அகற்ற, கலெக்டர், நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு கடந்த ஜன., 2ம் தேதி உத்-தரவிட்டது. தற்போது, ௯௦ நாட்களை கடந்தும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால் அதி-காரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆலோசித்து வருவதாக, சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us