ADDED : ஜூலை 08, 2024 07:02 AM
கோபி, : பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அரு-வியாக கொட்டுகிறது.
குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார விடு-முறை நாளான நேற்று குறைவான பயணிகளே வந்தனர். கல்வி நிறுவனங்கள் திறப்பால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள-தாக, நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர். தடுப்பணையில் ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரை செடிகளை, பாசன உதவியா-ளர்கள், மீனவர்கள் அகற்றினர். சுற்றுலா பயணிகள் குவியா-ததால், தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.