/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு கலை கல்லுாரிகளில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க கோரிக்கை அரசு கலை கல்லுாரிகளில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க கோரிக்கை
அரசு கலை கல்லுாரிகளில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க கோரிக்கை
அரசு கலை கல்லுாரிகளில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க கோரிக்கை
அரசு கலை கல்லுாரிகளில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 07:02 AM
சத்தியமங்கலம் : அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ஈரோடு வடக்கு மாவட்டக் குழு கூட்டம், சத்தியமங்கலத்தில் தனுஷ்கோடி தலை-மையில் நடந்தது. செயலாளர் பிரபு தீர்மானத்தை விளக்கிப் பேசினார். மாநில செயலாளர் தினேஷ் சிறப்புரையாற்றினார்.
சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரி தொடங்கப்-பட்டு பத்தாண்டு ஆகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் படித்து வருகின்றனர். இதனால் தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளை சார்ந்த பிற்பட்ட, மகவும் பிற்பட்ட, பட்டிய-லின, பழங்குடியின மாணவர்கள் அதிகம் பயன் பெறுகின்றனர்.
அதேசமயம் முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்கப்படாததால், கோவை அல்லது உதகை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் மாவட்டத்தில் நம்பியூர், அந்தியூர் போன்ற இடங்க-ளிலும் சமீபத்தில் அரசு கல்லுாரி தொடங்கப்பட்டது. இங்கு சில ஆண்டுகளில் இதே நெருக்கடி ஏற்படும். எனவே மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு கல்லுாரிகளில் முதுகலை பட்ட வகுப்புகளை தொடங்க வேண்டும் என தீர்மானம் நிறை-வேற்றினர்.