கீழ்பவானி விவசாயிகள் போராட்டம் வாபஸ்
கீழ்பவானி விவசாயிகள் போராட்டம் வாபஸ்
கீழ்பவானி விவசாயிகள் போராட்டம் வாபஸ்
ADDED : ஜூலை 30, 2024 03:28 AM
ஈரோடு: கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி அறிவிக்கப்-பட்ட போராட்டம், வாபஸ் பெறப்பட்டது. இதுபற்றி தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு வெளியிட்ட செய்திக்-குறிப்பில் கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் நஞ்சை பாச-னத்துக்கு தண்ணீர் திறக்க கோரி ஆக., 1ல் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதாலும், அணைக்கு நீர்வரத்து உள்ள-தாலும் அணை நிரம்பி தண்ணீர் வெறியேற்றப்படும் சூழல் நிலவு-கிறது. தவிர, அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் மற்றும் நீர் வளத்-துறை அதிகாரிகள், மராமத்து பணிகளை விரைந்து முடித்து ஆக., 15ல் தண்ணீர் திறப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனால் அறி-விக்கப்பட்டிருந்த போராட்டம் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்-டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.