/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குத்தியாலத்துார் பகுதியில் 100 நாள் வேலை கேட்டு மனு குத்தியாலத்துார் பகுதியில் 100 நாள் வேலை கேட்டு மனு
குத்தியாலத்துார் பகுதியில் 100 நாள் வேலை கேட்டு மனு
குத்தியாலத்துார் பகுதியில் 100 நாள் வேலை கேட்டு மனு
குத்தியாலத்துார் பகுதியில் 100 நாள் வேலை கேட்டு மனு
ADDED : ஜூலை 30, 2024 03:28 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மலைப்பகுதியில் உள்ள குத்-தியாலத்துார், அணைக்கரை, கிராம மக்கள் நேற்று மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதியில், 100 நாள் வேலை திட்ட வரு-வாயை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. வெயில் காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால், 100 நாள் வேலை திட்டத்தில் இப்பகுதி நீர் நிலைகளை துார்வார வேண்டும். அல்லது வனப்பகுதிக்குள் உள்ள ஆறு, ஓடைகளுக்கு ஆடு, மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டி உள்ளது.எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் பணியும் வழங்கி, குளம், குட்டை-களை துார்வாரி, புதிய குட்டைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள குருமனிட்டை, பைரமரதொட்டி, மல்லன்தொட்டி, சாமிதொட்டி, கிணத்து தொட்டை போன்ற பகு-திக்கு அரசு பஸ்களை பகல் மற்றும் இரவில் இயக்க வேண்டும். குத்தியாலத்துார் பஞ்.,ல் பைப்லைன், வடிகால் வசதி, தெரு விளக்கு போன்றவை ஏற்படுத்தி, கான்கிரீட் வீதிகள் அமைத்து தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.