Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவில் பண்டிகை ஞாபகமாக தயாராகும் நாட்டு மூங்கில் குச்சி

கோவில் பண்டிகை ஞாபகமாக தயாராகும் நாட்டு மூங்கில் குச்சி

கோவில் பண்டிகை ஞாபகமாக தயாராகும் நாட்டு மூங்கில் குச்சி

கோவில் பண்டிகை ஞாபகமாக தயாராகும் நாட்டு மூங்கில் குச்சி

ADDED : ஜூலை 31, 2024 07:15 AM


Google News
அந்தியூர்: அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் நடப்-பாண்டு ஆடி தேரோட்டம், ஆக., ௭ம் தேதி வெகு விமரிசையாக நடக்கவுள்ளது. பண்டிகையின் ஒரு சிறப்பாக, கோவிலுக்கு வந்து செல்லும் பலர், நாட்டு மூங்கில் குச்சி வாங்கி செல்வர்.

இதற்கான நாட்டு மூங்கில் குச்சி தயாரிப்பில், செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த வெங்-கடேஷ், மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த, 30 ஆண்டுகளாக இப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று, மூங்கில் குச்சிகளை விலைக்கு வாங்கி வருகிறார். குச்சிகளை கச்சித-மாக வெட்டி, டிசைன் போடுகிறார். தேரோட்டம் நடக்கும் நாளில் விற்பனைக்கு கொண்டு செல்-கிறார். நடப்பாண்டு ஒரு குச்சி, 100 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us