/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஜெ.டி.,யை சந்தித்த சஸ்பெண்ட் ஊழியர் தீர்வு காண தொழிற்சங்கம் வலியுறுத்தல் ஜெ.டி.,யை சந்தித்த சஸ்பெண்ட் ஊழியர் தீர்வு காண தொழிற்சங்கம் வலியுறுத்தல்
ஜெ.டி.,யை சந்தித்த சஸ்பெண்ட் ஊழியர் தீர்வு காண தொழிற்சங்கம் வலியுறுத்தல்
ஜெ.டி.,யை சந்தித்த சஸ்பெண்ட் ஊழியர் தீர்வு காண தொழிற்சங்கம் வலியுறுத்தல்
ஜெ.டி.,யை சந்தித்த சஸ்பெண்ட் ஊழியர் தீர்வு காண தொழிற்சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவம-னையில், 'க்யூ.பி.எம்.எஸ்.,' என்ற ஒப்பந்த நிறு-வனத்தின் கீழ், 230 ஒப்பந்த பணியாளர் 'ஹவுஸ் கீப்பிங்' பணி செய்கின்றனர். இவர்களை டாக்டர், செவிலியர், உயரதிகாரிகள் தங்களது சொந்த வேலைகளுக்கும், டாக்டர்கள் மற்றும் செவிலி-யர்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் ஈடுப-டுத்துகின்றனர். இதுபற்றிய வீடியோக்கள் வெளியானதால், ஒப்-பந்த பணியாளர்கள் சண்முகம், வேலுசாமி, பிரகாஷ், பூங்கொடி என நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை வாபஸ் பெற்று, பணி வழங்க தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) அம்பிகா சண்முகத்தை, சஸ்பெண்ட் ஊழியர்கள் மற்றும் சில ஊழியர்கள் நேற்று சந்தித்து, தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது, என கேட்டதுடன், வாபஸ் பெற கோரினர். மாலை வரை இணை இயக்குனர் மற்றும் க்யூ.பி.எம்.எஸ்., நிறுவனத்-தினர் பேசியும் தீர்வு காணப்படவில்லை.இதுபற்றி நோட்டீஸ் வழங்கி, மருத்துவ பணிகள் இணை இயக்குனரிடம் பேசி தீர்வு காணப்போவ-தாக, தமிழ்நாடு மருத்துவமனை துாய்மை பணி-யாளர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சுந்தர-மூர்த்தி தெரிவித்துள்ளார்.