ADDED : ஜூன் 06, 2025 01:08 AM
தாராபுரம், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் திலீப்குமார், 52; தாராபுரம் அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தாராபுரம்-திருப்பூர் பைபாஸ் சாலையில் அரசு ஐ.டி.ஐ., அருகில், சென்டர் மீடியனை சைக்கிளுடன் நேற்று மாலை, 6:45 மணியளவில் தள்ளியபடி கடந்து
சென்றார். மதுரையில் இருந்து திருப்பூர் வந்த அரசு பஸ் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொணடு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து டிரைவர் மதனகோபால், 47, மீது, தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.