ADDED : ஜூன் 06, 2025 01:08 AM
கோபி, கோபி அருகே கொளப்பலுாரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 66; இவரின் மனைவி ஆராயாள், 63; மாருதி காரில் வேட்டைக்காரன் கோவில் என்ற இடத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. வெங்கடேஷ் சுதாரித்து கொண்டு காரை விட்டு இறங்கி, கோபி தீயணைப்பு நிலைத்துக்கு தகவல் தெரிவித்தார். கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.