/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 27 நட்சத்திரத்துக்கான மரக்கன்று நடும் விழா 27 நட்சத்திரத்துக்கான மரக்கன்று நடும் விழா
27 நட்சத்திரத்துக்கான மரக்கன்று நடும் விழா
27 நட்சத்திரத்துக்கான மரக்கன்று நடும் விழா
27 நட்சத்திரத்துக்கான மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூன் 06, 2025 01:07 AM
கோபி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோபி அருகே பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், 27 நட்சத்திரங்களை வகைப்படுத்தி, அதற்கான மரக்கன்றுகளை நடவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதையடுத்து கோவில் அடிவாரத்தில், மரக்கன்று நடும் விழா நேற்று காலை நடந்தது. அஸ்வினி நட்சத்திரத்துக்கு எட்டி மரம், கார்த்திகை-அத்திமரம், மகம்-ஆலமரம், மூலம்--மாமரம், ரேவதி-இலுப்பை மரம் என மொத்தம் 27 நட்சத்திரத்தையும், தனித்தனியே அடையாளப்படுத்தி மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்சோதி, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் அறிவழகன் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.