/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தட்கல் முறை மின் இணைப்பு சத்தி விவசாயிகள் எச்சரிக்கை தட்கல் முறை மின் இணைப்பு சத்தி விவசாயிகள் எச்சரிக்கை
தட்கல் முறை மின் இணைப்பு சத்தி விவசாயிகள் எச்சரிக்கை
தட்கல் முறை மின் இணைப்பு சத்தி விவசாயிகள் எச்சரிக்கை
தட்கல் முறை மின் இணைப்பு சத்தி விவசாயிகள் எச்சரிக்கை
ADDED : ஜூலை 20, 2024 07:10 AM
சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் தாலுகாவில் தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கக் கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலை-மையிலான விவசாயிகள், செயற்பொறியாளர் சண்முகசுந்தரத்-திடம் மனு அளித்தனர்.
மனு விபரம்: கடந்த, 2020 முதல், 500க்கும் மேற்பட்ட விவசா-யிகள், தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு கோரி பணம் செலுத்தியுள்ளனர். காலக்கெடு முடிந்தும் இணைப்பு கொடுக்க-வில்லை. அதிகபட்சம் மூன்று மாதத்துக்குள் இணைப்பு கொடுக்-கப்படும் என்ற அரசின் உத்தரவை நம்பியே, வட்டிக்கு கடன் வாங்கி மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர்.
ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் மின் இணைப்பு கொடுக்-காமல், காரணத்தை மட்டுமே மின் வாரியம் கூறி வருகிறது.
கடந்த, 2020 முதல் தற்போது வரை, தட்கல் முறையில் மின் இணைப்பு கேட்டு பணம் கட்டிய அனைத்து விவசாயிகளுக்கும், 15 நாட்களுக்குள் இணைப்பு கொடுக்க வேண்டும். தவறும் பட்-சத்தில் அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.