/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 5,000 மாணவர்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் இலக்கு 5,000 மாணவர்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் இலக்கு
5,000 மாணவர்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் இலக்கு
5,000 மாணவர்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் இலக்கு
5,000 மாணவர்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் இலக்கு
ADDED : ஜூலை 20, 2024 07:10 AM
ஈரோடு : வங்கியாளர்கள் கல்வி கடன் வழங்குவது குறித்து கல்லுாரி நிர்-வாக ஒருங்கிணைப்பாளர், மாணவ, மாணவியருக்கு பயிற்சி மற்றும் கலந்தாலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது.
இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் பெற தேவையான ஆவணங்கள், சான்றிதழ்களை, வித்யாலட்சுமி, ஜன்சமர்த் ஆகிய இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை பற்றி, கல்லுாரி நிர்வா-கத்துக்கும் பயிற்சி தரப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு, 2024-25ம் கல்வி ஆண்டில், 5,000 மாணவ, மாணவியருக்கு, 70 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.