/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம் குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்
குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்
குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்
குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்
ADDED : மார் 15, 2025 01:41 AM
குடிநீர் இணைப்பு தொட்டியைமூடாததால் விபத்து அபாயம்
கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பிரிவை கடந்து, பிரதான சத்தி சாலையில், நகராட்சி பிரதான குடிநீர் குழாய் செல்லும் இணைப்பு பகுதியில் குழி தோண்டினர். பல மாதங்களாக குழியாகவே இருந்த நிலையில், நகராட்சி சார்பில் கான்கிரீட் கலவையை கொண்டு தொட்டிபோல் கட்டினர். அதற்கான மூடியும் தயார் செய்தனர். அதைக்கொண்டு தொட்டியை மூடாமல், மூடியை அதன் அருகே கிடத்தி வைத்துள்ளனர். குழியை ஒட்டி நடைபாதையும் உள்ளது. இரவில் நடந்து செல்வோர் தவறி விழுந்தால், தண்ணீரில் மூழ்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படும் முன் தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.