/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருந்துறை ஆர்.டி.ஓ., ஆபீசில்காலி பணியிடங்களால் பாதிப்பு பெருந்துறை ஆர்.டி.ஓ., ஆபீசில்காலி பணியிடங்களால் பாதிப்பு
பெருந்துறை ஆர்.டி.ஓ., ஆபீசில்காலி பணியிடங்களால் பாதிப்பு
பெருந்துறை ஆர்.டி.ஓ., ஆபீசில்காலி பணியிடங்களால் பாதிப்பு
பெருந்துறை ஆர்.டி.ஓ., ஆபீசில்காலி பணியிடங்களால் பாதிப்பு
ADDED : மார் 15, 2025 01:41 AM
பெருந்துறை ஆர்.டி.ஓ., ஆபீசில்காலி பணியிடங்களால் பாதிப்பு
பெருந்துறை:பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலக ஆர்.டி.ஓ., சக்திவேல், பணி மாறுதலில் சென்ற நிலையில், அந்த இடம் இன்னும் நிரப்பப்படவில்லை. இதேபோல் இரண்டு மோட்டார் இன்ஸ்பெக்டர்களும் சில மாதங்களுக்கு முன் பணிமாறுதலில் சென்றனர். இதுவும் இன்னும் காலியாகவே உள்ளது. தற்போது வாரத்தில் ஒருநாள் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஓ., பெருந்துறைக்கு வந்து செல்கிறார். இதேபோல் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் இன்ஸ்பெக்டர் வாரத்தில் ஒரு நாள் வருகிறார். இதனால் மக்களின் விண்ணப்பங்கள் பரிசீலித்து அனுமதி பெற வாரக்கணக்கில் ஆகிறது. வாகன உரிமையாளர், ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையை தவிர்க்க விரைவில் காலி பணியிடங்களை நிரப்ப, கோரிக்கை எழுந்துள்ளது.