ADDED : செப் 23, 2025 04:41 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அறிவுத்திருக்கோயிலில் மனைவியர் தினவிழா நடந்தது. உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் பேராசிரியர் தமோதரன் தலைமை வகித்தார்.
செயலாளர் பழனிசாமி வரவேற்றார். ஈஸ்ட்மேன் ஸ்பின்னிங் மில்ஸ் துணைத்தலைவர் விஜயகுமார் - முத்துமேகலா சிறப்பு தம்பதியாக பங்கேற்றனர். மண்டல செயலாளர் பாலசுந்தர், பொருளாளர் மோகனவேலு, இணைசெயலர் நளினி தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.