/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காட்டுப்பன்றி வேட்டை: நாய்களுடன் 14 பேர் கைது காட்டுப்பன்றி வேட்டை: நாய்களுடன் 14 பேர் கைது
காட்டுப்பன்றி வேட்டை: நாய்களுடன் 14 பேர் கைது
காட்டுப்பன்றி வேட்டை: நாய்களுடன் 14 பேர் கைது
காட்டுப்பன்றி வேட்டை: நாய்களுடன் 14 பேர் கைது
ADDED : செப் 23, 2025 04:41 AM

கன்னிவாடி: கன்னிவாடி வனத்துறை ரேஞ்சர் குமரேசன் தலைமையிலான குழுவினர் குட்டத்துப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வெயிலடிச்சான்பட்டி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் சிலர் வேட்டை நாய்களுடன் முகாமிட்டு இருந்தனர்.
அங்கிருந்த 14 பேரை வனத் துறையினர் சுற்றி வளைத்தனர்.
வெயிலடிச்சான்பட்டி அபிமன்யு, கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த மலையாண்டி, தங்கவேல், கருப்பையா, கோவிந்தராஜ், முருகன், நேரு, குமரவேல், அக்காடின்மேட்டை சேர்ந்த மாணிக்கம், சக்திவேல், குளித்தலையை சேர்ந்த பழனிச்சாமி, ஆறுமுகம், மணி உட்பட 14 பேர் பிடிபட்டனர். விசாரணையில் இவர்கள் 14 வேட்டை நாய்களுடன் 4 காட்டுப்பன்றிகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இவர்களை கைது செய்த வனத்துறையினர் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்தனர். சிப்பிப்பாறை வகையை சேர்ந்த 14 நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டு திண்டுக்கல் ப்ளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன.