Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குறைதீர் கூட்டத்தில் தர்ணா; 343 பேர் முறையீடு

குறைதீர் கூட்டத்தில் தர்ணா; 343 பேர் முறையீடு

குறைதீர் கூட்டத்தில் தர்ணா; 343 பேர் முறையீடு

குறைதீர் கூட்டத்தில் தர்ணா; 343 பேர் முறையீடு

ADDED : செப் 23, 2025 04:40 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தின் போது வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட கணவன், மனைவி , பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 343 பேர் மனுக்கள் வாயிலாக கலெக்டரிடம் முறையிட்டனர்.

கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட 343 மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

3312 பேருக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட நிர்வாகம், மாசுக்காட்டுப்பட்டு வாரியம், மாநகராட்சி திண்டி நீர்வளம் இணைந்து நடத்திய நெகிழி சேகரிப்பு இயக்கம்' சார்ந்த சுவர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி, மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) செந்தில்வேல், மாவட்ட வழங்கல் , நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமார், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகுரு கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்லை மீனாட்சி நாயக்கன்பட்டி, பெரியார்நகரை சேர்ந்த சுப்பிரமணி மனைவி குருவம்மாளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

சுப்பிரமணி கூறுகையில், ''25 ஆண்டாக ஒரே இடத்தில் குடியிருந்து வருகிறோம். வீட்டுமனை பட்டா கேட்டு 5 ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும் அலைக்கழிக்கின்றனர்'' என்றார். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us