ADDED : செப் 23, 2025 04:40 AM
திண்டுக்கல்: போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனிசாமி, எஸ்.ஐ., ஹரிஹரசுதன் தலைமையிலான போலீசார் நகர் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
பஜார் பகுதியில் பயணிகள் ஆட்டோக்களை சரக்கு ஆட்டோக்களாக வடிவமைத்து மூடைகள், பெட்டிகள் ஏற்றிச்சென்ற 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையாக பதிவு செய்த பின்பே சாலையில் இயக்க வேண்டும் என எச்சரிக்கை செய்தனர்.