ADDED : செப் 23, 2025 04:39 AM
பழநி: நெய்க்காரப்பட்டி அருகே அழகாபுரியில் சொத்து பிரச்னையில் சித்தப்பாவை கொன்ற கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அழகாபுரி மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி 35. அதே பகுதியில் வசிக்கும் இவரது சித்தப்பா மாசாணம் 50. இருவர் இடையே இட பிரச்னை காரணமாக தகராறு இருந்துள்ளது. 2020 ஜன. 28 இரவில் தகராறு ஏற்பட்டதில் மாசாணம் தாக்கப்பட்டார்.
பழநி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதன் வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை,ரூ.பத்தாயிரம் அபராதம் விதித்து நீதிபதி மலர்விழி தீர்ப்பளித்தார்.