/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அறவே இல்லை வசதிகள்; சிரமத்தில் பெரியம்மாபட்டி ஊராட்சி மக்கள் அறவே இல்லை வசதிகள்; சிரமத்தில் பெரியம்மாபட்டி ஊராட்சி மக்கள்
அறவே இல்லை வசதிகள்; சிரமத்தில் பெரியம்மாபட்டி ஊராட்சி மக்கள்
அறவே இல்லை வசதிகள்; சிரமத்தில் பெரியம்மாபட்டி ஊராட்சி மக்கள்
அறவே இல்லை வசதிகள்; சிரமத்தில் பெரியம்மாபட்டி ஊராட்சி மக்கள்
ADDED : செப் 23, 2025 04:39 AM

நெய்க்காரப்பட்டி: பழநி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியம்மாபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் அறவே இல்லாததால் ஊராட்சி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
அருவங்காடு, காந்திநகர், ஐயர் தோட்டம், புளிக்கோட்டையூர், புளியம்பட்டி, சண்முகம் பாறை, முல்லை நகர், கணுவாய், குறிஞ்சி நகர், சின்ன காந்திபுரம் காமராஜ் நகர், கரிகாரன்புதுார், குப்பாண்டி செட்,பெருமாள் புதுார், பொருந்தல், ராஜீவ் நகர், சோலை தோட்டம் பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வாழும் கணுவாய், குறிஞ்சி நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் ஆரம்ப கல்வியுடன் பள்ளி படிப்பை முடித்து விடுகின்றனர். சாலை வசதி, வீட்டுமனை பட்டா, குடிநீர் போன்ற எந்த வசதிகளும் முறையாக இல்லாததால் ஊராட்சி மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.