Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி கிரிவீதியை மரங்களால் பசுமையாக்கும் தேவஸ்தானம்

பழநி கிரிவீதியை மரங்களால் பசுமையாக்கும் தேவஸ்தானம்

பழநி கிரிவீதியை மரங்களால் பசுமையாக்கும் தேவஸ்தானம்

பழநி கிரிவீதியை மரங்களால் பசுமையாக்கும் தேவஸ்தானம்

ADDED : செப் 22, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
பழநி : பழநி கோயில் நிர்வாகம், விழுதுகள் அமைப்புடன் இணைந்து கிரி வீதியில் மரங்கள் வைத்து பசுமையாக்கவும், இடும்பன் மலையில் பனை விதைகளை துாவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழநி கிரி வீதி 3 கிலோ மீட்டர் துாரம் கொண்டது. இப்பகுதியில், கோயில் நிர்வாக அனுமதியுடன் விழுதுகள் அமைப்பினர், கோயில் ஊழியர்கள் இணைந்து கடம்பு, மகிழம், அரசு, ஆழம், வேம்பு, இலுப்பை, சரக்கொன்றை, எழிலைப்பாலை, நாகலிங்கம் மரம், நாவல், பாதாம், புங்கன் உள்ளிட்ட மரங்களின் கன்றுகளை நடப் பட்டுள்ளன.

8 அடி முதல் 10 அடி வரை நன்கு வளர்ந்த மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் கம்பி வேலி அமைத்து கோயில் நிர்வாகம் பராமரித்து வருகிறது.

தொடர் பராமரிப்பு பணி மாரிமுத்து, கோயில் இணை கமிஷனர் : தமிழக அரசு, ஹிந்து அறநிலை துறை சார்பில் மரங்கள் அதிக அளவில் நட அறிவுறுத்தியுள்ளது. கிரி வீதி மட்டும் இல்லாமல் சிவகிரிபட்டி, சின்னகலையம்புத்தூர், பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, கலை பண்பாட்டுக் கல்லூரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்பு இல்லம், சத்திரப்பட்டி, சித்திலவாடம்பட்டி, தேவத்தூர், கள்ளிமந்தயம், பொருளூர், பெரியகோட்டை, புளியம்பட்டி, அய்யம்புள்ளி பகுதியில் மரங்கள் நடப்பட்டுள்ளன. இதுவரை 39 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் பழநி மலைப்பகுதிகளில் பனை விதைகள் தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இடும்பன் மலை கோயில் பகுதிகளிலும் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் தூவ நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் காலங்களில் பழநி மலை, கிரிவீதி, இடும்பன் மலை பசுமையாகவும் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நடப்பட்ட மரங்களுக்கு தொடர்ந்து பராமரிப்பு பணிகள் ஊழியர்கள் மூலம் செய்து வருகிறோம்.

மழைக்காலத்திற்கு முன்பே நடும் பணி குப்புசாமி, ஒருங்கிணைப்பாளர், விழுதுகள் அமைப்பு : விழுதுகள் அமைப்பிற்கு கோயில் நிர்வாகம், கிரிவீதியில் பனை விதைகள் நடவும், மரங்கள் நடவும் அனுமதி அளித்துள்ளது. 30 ஆயிரம் பனை விதைகள் தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் கிடைக்கும் பனை விதைகளை சேகரித்து பழநி மலைப் பகுதிகளில் தூவியுள்ளோம். மழை காலத்திற்கு முன்பே பனை விதைகள் தூவவும், மரங்கள் நடவும் அனுமதி அளிக்கப்பட்டதால் அவை வளர்ந்து விடும். பனை மரங்கள் நிலத்தடி நீரை அதிகப்படுத்தும். ஆரோக்கிய உணவு வழங்கும் மரமாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us