/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வேலை வாய்ப்பு துறை பதிவிற்காக பள்ளி மாணவர்கள் அலைக்கழிப்பு; கூட்டுறவு அரசுத்துறை சேவை மையங்களும் புறக்கணிப்பதால் வேலை வாய்ப்பு துறை பதிவிற்காக பள்ளி மாணவர்கள் அலைக்கழிப்பு; கூட்டுறவு அரசுத்துறை சேவை மையங்களும் புறக்கணிப்பதால்
வேலை வாய்ப்பு துறை பதிவிற்காக பள்ளி மாணவர்கள் அலைக்கழிப்பு; கூட்டுறவு அரசுத்துறை சேவை மையங்களும் புறக்கணிப்பதால்
வேலை வாய்ப்பு துறை பதிவிற்காக பள்ளி மாணவர்கள் அலைக்கழிப்பு; கூட்டுறவு அரசுத்துறை சேவை மையங்களும் புறக்கணிப்பதால்
வேலை வாய்ப்பு துறை பதிவிற்காக பள்ளி மாணவர்கள் அலைக்கழிப்பு; கூட்டுறவு அரசுத்துறை சேவை மையங்களும் புறக்கணிப்பதால்
UPDATED : செப் 22, 2025 05:51 AM
ADDED : செப் 22, 2025 03:09 AM

ஏழை, நடுத்தர குடும்பங்களிலும் மேல்நிலை, உயர் கல்வியறிவு சேர்க்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெரும்பாலான அரசுத்துறை பணியிடங்களுக்கான நியமனம், தேர்வு மூலம் மட்டுமே நடக்கிறது.
இருப்பினும் கடைநிலை, தற்காலிக வாய்ப்பு உள்ளிட்ட சில பணியிடங்களுக்கான நியமனத்தில் வேலை வாய்ப்புத்துறை பதிவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி மட்டுமின்றி டைப்ரைட்டிங், கணினி என கூடுதல் தகுதிக்கான சான்றிதழ், பட்டய தகுதிகளும் இதில் பதிவு செய்யப்படுகிறது.
பெரும்பாலும் 10ம் வகுப்பு முடித்த அனைவரும் தொடர்கல்வி எந்த நிலையில் இருந்தாலும், அடிப்படை பதிவாக மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் கொண்டு பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சில ஆண்டுகளாக இந்த பதிவு பணியை படிப்பு முடித்த சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தாண்டு இப்பணியை பள்ளி நிர்வாகத்தினர் கைகழுவி விட்டனர். பதிவு பணியை மேற்கொள்ள முயலும்போது, தொடர்கல்விக்காக சேர்ந்துள்ள மாணவர்களின் வாரநாட்கள் முழுவதும் நேரம் கிடைக்காத நிலை உள்ளது.
கிராமப்புற மாணவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ள கூட்டுறவு, அரசுத்துறை சேவை மையங்களுக்கு செல்லும் சூழலில் பெரும்பாலான இடங்களில் செயல்பாடின்றி மூடப்பட்டு உள்ளன.
செயல்பாட்டில் உள்ள ஒரு சில இடங்களிலும் வருவாய் வாய்ப்புள்ள பணிகளுக்காக மாணவர்களை காத்திருத்தல், அலைக்கழிப்பிற்கு உள்ளாக்குகின்றனர்.
தனியார் மையங்களில் திருத்தம் செய்து கொள்ளும்படி பணியை புறக்கணித்து அனுப்பும் நிலையும் நீடிக்கிறது. சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு அலுவலர்களின் அலட்சியம் காரணமாக, அசல் மதிப்பெண் பட்டியல் வந்து 4 வாரங்களாகியும், பதிவு பணியை மேற்கொள்ள முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம், கடந்தாண்டுகளைப்போல சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.