/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அங்கன்வாடி பணி சிபாரிசுக்கு வராதீங்க தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்தில் விசித்திர பேனர் அங்கன்வாடி பணி சிபாரிசுக்கு வராதீங்க தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்தில் விசித்திர பேனர்
அங்கன்வாடி பணி சிபாரிசுக்கு வராதீங்க தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்தில் விசித்திர பேனர்
அங்கன்வாடி பணி சிபாரிசுக்கு வராதீங்க தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்தில் விசித்திர பேனர்
அங்கன்வாடி பணி சிபாரிசுக்கு வராதீங்க தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்தில் விசித்திர பேனர்
ADDED : ஜூன் 06, 2025 02:58 AM
வேடசந்துார்: அங்கன்வாடி பணி சிபாரிசுக்காக என்னை யாரும் அணுக வேண்டாம் என வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் தனது அலுவலகத்தில் பேனர் வைத்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது அரசு அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. ஒரு இடத்திற்கு குறைந்தது 5 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது செல்வாக்கை நிலை நாட்ட கட்சி நிர்வாகிகள், தொகுதி எம்.எல்.ஏ., வை சந்திப்பது வழக்கமாக உள்ளது. ஒரு இடத்திற்கு 10 பேர் விண்ணப்பம் அளித்து போட்டி ஏற்பட்டாலும் யாரையாவது ஒருவரை தான் நியமிக்க முடியும். இதனால் நமக்கு ஏன் வம்பு என வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., ஒதுங்கி இருக்க நினைத்தாரோ,பெரும் புள்ளிகளின் தலையீடு இருப்பதால் அமைதியாக இருக்க நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.
தனது அலுவலகத்தில் அங்கன்வாடி,சத்துணவு பணியாளர்களுக்கான தேர்வில் கலந்து கொண்டவர்கள் நியமனம் செய்ய சிபாரிசு வேண்டி என்னை அணுக வேண்டாம் என பணிவன்போடு கேட்டு கொள்வதாக பேனர் வைத்துள்ளார்.