/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காக்காத்தோப்பூரில் மேம்பாலம் ரூ.23 கோடியில் பணிகள் துவக்கம் காக்காத்தோப்பூரில் மேம்பாலம் ரூ.23 கோடியில் பணிகள் துவக்கம்
காக்காத்தோப்பூரில் மேம்பாலம் ரூ.23 கோடியில் பணிகள் துவக்கம்
காக்காத்தோப்பூரில் மேம்பாலம் ரூ.23 கோடியில் பணிகள் துவக்கம்
காக்காத்தோப்பூரில் மேம்பாலம் ரூ.23 கோடியில் பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 06, 2025 02:57 AM

வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை காக்காத்தோப்பூர் பிரிவில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் தினமலர் செய்தி எதிரொலியாக ரூ.23 கோடி திட்ட மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலையில் காக்காத்தோப்பூர் பிரிவு அருகே வேடசந்துார் நகர் பகுதிக்குள் செல்ல ரோடு பிரிந்து செல்கிறது. இந்த இடத்தில் இரவு நேரங்களில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வந்தன.
பல்வேறு விபத்துக்களில் குறைந்தது 10 க்கு மேற்பட்டோர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். இங்கு மேம்பாலம் அமைக்க தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் ரூ.23 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. இதற்காக ரோட்டின் இரு புறங்களிலும் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு சமன் செய்யப்பட்டு வருகிறது. பக்க ரோடு போடப்பட்டு போக்குவரத்து துவங்கிய பின் மையப் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் துவங்க உள்ளன. இதேபோல் தாடிக்கொம்பு மேம்பாலம் பகுதியிலிருந்து குடகனாற்று பாலம் வரை ரூ.4 கோடி மதிப்பில் பிரிவு ரோடும் அமைக்கப்பட்டுள்ளது.