/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இறைச்சி கழிவு பிரச்னைக்கு அய்யலுாரில் சிறப்பு ஏற்பாடு இறைச்சி கழிவு பிரச்னைக்கு அய்யலுாரில் சிறப்பு ஏற்பாடு
இறைச்சி கழிவு பிரச்னைக்கு அய்யலுாரில் சிறப்பு ஏற்பாடு
இறைச்சி கழிவு பிரச்னைக்கு அய்யலுாரில் சிறப்பு ஏற்பாடு
இறைச்சி கழிவு பிரச்னைக்கு அய்யலுாரில் சிறப்பு ஏற்பாடு
ADDED : ஜன 08, 2025 05:36 AM
வடமதுரை : அய்யலுார் தும்மனிக்குளத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டியதால் அதிருப்தியான விவசாயிகள் போராட்டம் அறிவித்தனர்.
இதையடுத்து இறைச்சி வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் கருப்பன் தலைமையில் நடந்தது. சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார், செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தனர்.
அய்யலுார் இறைச்சி கடைகளில் ஏற்படும் முடி, செதில் உள்ளிட்டவற்றை தனி பையிலும், சானத்தை தனி பையிலும், தோல், குடல், இறைச்சி கழிவுகளை தனி பையிலும் அவரவர் கடையில் சேகரித்து வைத்து பேரூராட்சி ஊழியர்கள் பெற்றுக் கொள்வது, இதையும் மீறி இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.