ADDED : ஜன 08, 2025 05:36 AM
சின்னாளபட்டி : சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் சிவக்குமார் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. படிக்கும் மாணவர்கள், தனித்தனியே ஆசிரியர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து கும்மியடித்தல், குலவையிடுதல் போன்றவற்றுடன் கொண்டாடினர். கோலப்போட்டி, பானை உடைத்தல் கபடி தண்ணீர் குடம் சுமந்து செல்லுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டு காளை, பசுக்களுகு பொங்கல், வாழைப்பழம் வழங்கப்பட்டது. மேலாளர் பாரதிராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், சிவரஞ்சனி பரிசு வழங்கினர்.-