/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அரசியல் கட்சி கொடிகம்பங்கள் அகற்றம் அரசியல் கட்சி கொடிகம்பங்கள் அகற்றம்
அரசியல் கட்சி கொடிகம்பங்கள் அகற்றம்
அரசியல் கட்சி கொடிகம்பங்கள் அகற்றம்
அரசியல் கட்சி கொடிகம்பங்கள் அகற்றம்
ADDED : ஜூன் 05, 2025 01:43 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அனைத்தும் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் 263 கொடி கம்பங்கள் இருப்பது தெரிய மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குள்ளனம்பட்டி, ரவுண்ட் ரோடு புதுார், ரவுண்ட் ரோடு, சிலுவத்துார் ரோடு, மரியநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 20க்கு மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நேற்று அகற்றப்பட்டன.
கொடிக்கம்பங்கள், கொடிக்கம்பங்களுக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள சுவர்கள் மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் இடிக்கப்பட்டது.
வேடசந்துார்: நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தினேஷ் பாபு தலைமையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் வேடசந்துார் பூத்தாம்பட்டி, ஸ்ரீராமபுரம், வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட், ஆத்துமேடு, சீத்தமரம் நால்ரோடு காக்காத்தோப்பூர், கருக்காம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்த, அனைத்து அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன. சாலை ஆய்வாளர்கள் அரியநாயகி, இன்பராஜ் உடனிருந்தனர்.