ADDED : செப் 19, 2025 02:20 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் துாய்மைப்பணியினை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என வலியுறுத்தி மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் கமிஷனிரிடம் மனுக்கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாநகர செயலாளர் அரபுமுகமது தலைமை வகித்தார்.
மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆஸாத், கவுன்சிலர்கள் கணேசன், மாரியம்மாள், சி.ஐ.டி.யு., மாவட்டச்செயலாளர் ஜெயசீலன் கலந்துகொண் டனர்.