/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கே.அய்யாபட்டியில் ரூ.10 கோடி வளர்ச்சி பணி அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார் கே.அய்யாபட்டியில் ரூ.10 கோடி வளர்ச்சி பணி அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
கே.அய்யாபட்டியில் ரூ.10 கோடி வளர்ச்சி பணி அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
கே.அய்யாபட்டியில் ரூ.10 கோடி வளர்ச்சி பணி அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
கே.அய்யாபட்டியில் ரூ.10 கோடி வளர்ச்சி பணி அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
ADDED : செப் 19, 2025 02:21 AM

சாணார்பட்டி: கே.அய்யாபட்டியில் ரூ.10 கோடிக்கான வளர்ச்சி பணிகளை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
-சாணார்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் சந்தானவர்த்தினி ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறையின் சார்பில் ரூ. 5 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் தலைமை வகித்தார். அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்து பேசியதாவது : முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி வருகிறார். கே.அய்யாப்பட்டி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான சிறுமலையில் உற்பத்தியாகி பாயும் குடகனாற்றின் கிளை நதியான சந்தானவர்த்தினி ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.
இதேபோல் ரூ.5 கோடி மதிப்பிலான மொட்டையகவுண்டன்பட்டி சாலை,பாறைப்பட்டி- மந்தநாயக்கன்பட்டி சாலை ஆகிய பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரராஜன், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ஜான்பீட்டர் நத்தம் பேரூராட்சி தலைவர் பாட்ஷா, ஒன்றிய துணைச் செயலாளர் டாக்டர் காளியப்பன்,நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், பி.டி.ஓ.,க்கள் இளையராஜா, முருகானந்தம், ஏ.பி.டி.ஓ., சுரேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, துணைத் தலைவர் ராசு, நிர்வாகி சக்திவேல்,ஊராட்சி செயலாளர்கள் கென்னடி, கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.