ADDED : ஜூன் 24, 2024 04:37 AM
வடமதுரை : திண்டுக்கல்லிலிருந்து தென்னம்பட்டி, பிலாத்து, சித்துவார்பட்டி, வழியே வடுகப்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் போதுமானதாக இல்லை.
அடிக்கடி வராமல் போவதும் உண்டு. இதனால் தோப்புபட்டி, வடுகப்பட்டி, சித்துவார்பட்டி, பாலக்குறிச்சி, மலைக்கோட்டை, பாரதிநகர் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போது மோர்பட்டி வழியே தார் ரோடு, வரட்டாற்றில் பெரிய கண் பாலம் அமைக்கப்பட்டது. இந்த வழியில் தற்போது பஸ் சேவை இல்லாமல் இருப்பதால் பல கிராம மாணவர்கள் ஆபத்தான முறையில் நான்கு வழிச்சாலை வழியே வடமதுரை பள்ளிகளுக்கு நடந்து சென்று திரும்புகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை, மோர்பட்டி, சித்துவார்பட்டி, பாலக்குறிச்சி வழியே வடுகப்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை துவக்க வேண்டும் என அப்பகுதியினர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர்.