ADDED : ஜூன் 24, 2024 04:37 AM
செம்பட்டி : செம்பட்டி வழியே திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் பல, பிற தடங்களில் இருந்து வரும் அரசு பஸ் நேரங்களில் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களில், அரசு பஸ் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர். டிக்கெட்டுகளில், ஸ்டேஜ் பெயர், தேதி போன்ற விபரங்கள் இல்லை. கட்டணத்தை மட்டும் குழப்பும் வகையில் குறிப்பிடுகின்றனர். புகார் அதிகரித்தபோதும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பிரச்னை நீடிக்கிறது. பயணிகள், பஸ் ஊழியர்கள் இடையே தகராறு தொடர்கிறது.