ADDED : ஜூன் 24, 2024 04:37 AM
வடமதுரை : அய்யலுாரில் வேளாண் அலுவலர் சுப்பையா கூறியதாவது: உயிர் உரம் உற்பத்தி மையங்களில் திரவ நிலை உயிர் உரங்கள் உற்பத்தி செய்து விற்கப்படுகிறது.
ரசாயன உரங்களை தவிர்த்து உயிர் உரங்களை பயன்படுத்தும்போது மண் வளம் அதிகரித்து மகசூலும் பல மடங்கு கூடுதலாகும். நெல், சிறுதானியங்கள், தென்னை, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கான உயிர் உரங்களான அசோஸ்பயிரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்டவற்றை வாங்கி பயன்பெறலாம். வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றார்.