/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இளையராஜாவுக்கு புகைப்படத்தால் சிறப்பு செய்த பழநி ஓவிய ஆசிரியர் இளையராஜாவுக்கு புகைப்படத்தால் சிறப்பு செய்த பழநி ஓவிய ஆசிரியர்
இளையராஜாவுக்கு புகைப்படத்தால் சிறப்பு செய்த பழநி ஓவிய ஆசிரியர்
இளையராஜாவுக்கு புகைப்படத்தால் சிறப்பு செய்த பழநி ஓவிய ஆசிரியர்
இளையராஜாவுக்கு புகைப்படத்தால் சிறப்பு செய்த பழநி ஓவிய ஆசிரியர்
ADDED : ஜூன் 01, 2025 10:57 PM

பழநி:பழநி சத்திரப்பட்டி அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் அன்பு செல்வன் திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தாயார் புகைப்படங்களை பயன்படுத்தி புதிய முறையில் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார்.
இளையராஜா பிறந்த நாளில் அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இளையராஜாவின் தாயார் சின்னதாயம்மாவின் புகைப்படங்களை பயன்படுத்தி இளையராஜாவின் ஓவியத்தை 'சின்னத் தாயவள் தந்த ராசாவே' என்ற தலைப்பில் வடிவமைத்துள்ளார். இதை பழநியில் காட்சிப்படுத்தி உள்ளார்.
ஓவியர் அன்பு செல்வன் கூறியதாவது : இளையராஜாவின் தாயார் சின்னதாயம்மாவின் சிறிய அளவிலான 2000 புகைப்படங்களை பயன்படுத்தி ஓவியத்தை வடிவமைத்துள்ளேன். இதற்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது. ஓவியம் மூன்றடி உயரம், இரண்டு அடி அகலம் உடையது என்றார்.