/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல், -மதுரை பை பாஸ் ரயில் பாதைக்கு டெண்டர் திண்டுக்கல், -மதுரை பை பாஸ் ரயில் பாதைக்கு டெண்டர்
திண்டுக்கல், -மதுரை பை பாஸ் ரயில் பாதைக்கு டெண்டர்
திண்டுக்கல், -மதுரை பை பாஸ் ரயில் பாதைக்கு டெண்டர்
திண்டுக்கல், -மதுரை பை பாஸ் ரயில் பாதைக்கு டெண்டர்
ADDED : ஜூன் 01, 2025 10:51 PM
வடமதுரை:திண்டுக்கல், மதுரை நகருக்கு வெளியே பை பாஸ் ரயில் பாதைகள் அமைக்க 'சர்வே' நடத்த ரயில்வே துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ரோடு போக்குவரத்து, மக்கள் தொகை பெருக்கத்தால் ஒரு காலத்தில் நகர்களின் மத்தியில் சென்ற வெளியூர் இணைப்பு ரோடுகள், பை பாஸ் ரோடுகளாக நகருக்கு வெளிப்புறமாக இடம் மாறி உள்ளன. இதனால் அந்த நகருக்குள் செல்ல அவசியமில்லாத வாகனங்கள் தற்போது பை பாஸ் ரோடுகள் வழியே விரைவாக கடந்து செல்கின்றன. இதே போல் ரயில்வே துறையிலும் பல இடங்களில் பைபாஸ் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த பல ஆண்டுகள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தற்போதே பல இடங்களில் இதுபோன்ற பை பாஸ் ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு நிர்வாக ஒப்புதல், மாநில அரசின் ஒத்துழைப்பு போன்ற விஷயங்கள் சரிவர சென்றால் மட்டுமே இத்திட்டங்கள் நிறைவேறும் என்பது குறிப்பிடதக்கது. சமீபத்தில் புதிய வழித்தடம், 2வது பாதை என தமிழகத்தில் 13 திட்டங்களுக்கு சர்வே நடத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் பை பாஸ் ரயில் பாதை கணக்கில் மதுரை திண்டுக்கல் பாதையில் இருக்கும் சோழவந்தானில் இருந்து மதுரை போடி பாதையில் கருமாத்துாரை இணைக்க 15 கி.மீ., துாரத்திற்கு ரூ.35.25 லட்சம், திண்டுக்கல் கரூர் பாதையில் எரியோட்டில் இருந்து திண்டுக்கல் பொள்ளாச்சி பாதையில் முதல் ஸ்டேஷனாக இருக்கும் அக்கரைப்பட்டியுடன் இணைக்க 20 கி.மீ., துாரத்திற்கு ரூ.47 லட்சம் என சர்வே பணிக்கு ஒதுக்கீடு செய்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.