/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆன்லைன் சூதாட்டம் தொழிலாளி தற்கொலை ஆன்லைன் சூதாட்டம் தொழிலாளி தற்கொலை
ஆன்லைன் சூதாட்டம் தொழிலாளி தற்கொலை
ஆன்லைன் சூதாட்டம் தொழிலாளி தற்கொலை
ஆன்லைன் சூதாட்டம் தொழிலாளி தற்கொலை
ADDED : செப் 13, 2025 02:15 AM
வேடசந்துார்:திண்டுக்கல்மாவட்டம் வேடசந்துார் தனியார் நுாற்பாலையில் பீஹார் மாநிலம் முஜாபூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜன் குமார் 23, பணியாற்றி வந்தார். ஆன்லைன் டிரேடிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் செப்.7 ல் வாங்கிய சம்பள பணம் அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டார்.
குடும்பத்திற்கு மாதம்தோறும் அனுப்பும் பணத்தையும் அனுப்பவில்லை. இந்த வேதனையில் இருந்த அவர் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் விசாரிக்கிறார்.