ADDED : செப் 12, 2025 04:34 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சுற்றிய பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நிலத்தை உழவு செய்து மழை பெய்தால் மக்காச்சோளம் விதைக்கலாம் என விவசாயிகள் காத்திருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லபட்டி, லெக்கையன்கோட்டை, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை சுற்றிய பகுதிகளில் கனமழை பெய்தது. மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் மக்காச்சோளம் விதைக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மானாவாரி நிலங்களில் வேளாண் தொழில் மும்முரம் அடைந்துள்ளது.