ADDED : செப் 12, 2025 04:35 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது.
ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் யானைகள், மான்கள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன.
இவை அடிக்கடி தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளான பெத்தேல்புரம், தட்டைக்குழிக்காடு , புலிகுத்திக்காடு பகுதிகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று பரப்பலாறு அணை பகுதியில் ஒற்றையானை நடமாட்டம் இருந்தது. அணைப்பகுதியில் இருந்த நீரை குடித்து விட்டு சென்றது. அடிக்கடி ஒட்டன்சத்திரம் பாச்சலூர் ரோட்டை இரவு நேரத்தில் கடந்து செல்கிறது. ஒற்றை யானையை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி உள்ளனர்