/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள் ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள்
ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள்
ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள்
ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள்
ADDED : செப் 12, 2025 04:35 AM
பழநி: பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவுப்படி வந்த ஊழியர்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் திரும்பினர்.
ஒட்டன்சத்திரம் இடையகோட்டை குமரமுத்து வெங்கடாதரிக்கு சொந்தமான 55 ஏக்கர் நிலம் நான்காஞ்சிஆறு அணை திட்டத்திற்கு 1974ல் வழங்கப்பட்டது .அரசு சார்பில் இழப்பீட்டு தொகை வழங்காமல் இருந்துள்ளனர். இது குறித்து வாரிசுகளான கோகுலகுமார், ஆனந்த் சிவசுப்பிரமணியம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு லோக் அதாலத் மூலம் ரூ.83 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. பகுதி தொகை வழங்கிய நிலையில் மீதமுள்ள தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ.59 லட்சத்து 79 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. தவறும் நிலையில் பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஆக.25ல் நீதிமன்ற ஊழியர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்தனர். உயர் அதிகாரிகள் இல்லாத நிலையில் திரும்பினர்.
தொடர்ந்து நேற்று மீண்டும் ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய ஊழியர்கள் வந்தனர் .அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சிறிது காலம் அவகாசம் வழங்க திரும்பி சென்றனர்.