/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் 'சூழல் காப்போம்' சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் 'சூழல் காப்போம்'
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் 'சூழல் காப்போம்'
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் 'சூழல் காப்போம்'
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் 'சூழல் காப்போம்'

இயற்கையின் மகத்துவத்தை உணர வேண்டும்
கண்மணி, ஒருங்கிணைப்பாளர், சூழல் காப்போம் அமைப்பு : இயற்கையின் மகத்துவத்தை இன்னும் நாம் உணர வேண்டியுள்ளது. மாசில்லா சமுதாயம் என்பது மரக்கன்று நடவு, மரம் வளர்ப்பு முறைகள் மட்டுமின்றி நிலத்தை விஷமாக்கும் நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும். மாணவர் குழுவினருடன் சுற்றுச்சூழல் மீட்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக 'மரக்கன்றும் மஞ்சப்பையும்' என்பது தனி இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் உலக வெப்பமயமாதலை தவிர்க்கும் பொருட்டு அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. உணவு பொருட்கள் விற்பனை கடைகளில், மஞ்சப்பை, தூக்கு வாளி பயன்பாடுகளை ஊக்குவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமங்களிலும் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை மாணவ சமுதாயத்தில் விதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலித்தீன் ஒழிப்பு, புகையில்லா சூழல், மஞ்சப்பை பயன்பாட்டின் அவசியம், மரக்கன்று நடவு பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
தொடர் விழிப்புணர்வு
--கிருஷ்ணபாண்டி, தன்னார்வலர், செம்பட்டி: மஞ்சப்பை உபயோக அவசியத்தை, அனுபவபூர்வமாக அறிந்துகொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். வாசிப்பு திறன், புதிர், நடப்பு அறிவியல் கண்டுபிடிப்புகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறோம். மாணவர்களை கொண்டு மரக்கன்றுகள் நடவு, சுற்றுச்சூழலில் பாலிதீன் குறித்த விழிப்புணர்வு, தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் சார்ந்த பிரசாரம், மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தல், குப்பைகளை தரம் பிரித்து வழங்க வழிகாட்டுதல், தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஆலோசனை முகாம்கள் நடத்தி வருகிறோம்.-