/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 2 பேட்டரி பஸ், எல்.இ.டி., டிஸ்ப்ளே அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார் 2 பேட்டரி பஸ், எல்.இ.டி., டிஸ்ப்ளே அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
2 பேட்டரி பஸ், எல்.இ.டி., டிஸ்ப்ளே அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
2 பேட்டரி பஸ், எல்.இ.டி., டிஸ்ப்ளே அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
2 பேட்டரி பஸ், எல்.இ.டி., டிஸ்ப்ளே அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
ADDED : ஜூன் 16, 2025 02:02 AM

பழநி: பழநி கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட 2 பஸ்கள் மற்றும் எல்.இ.டி., டிஸ்ப்ளே போர்டு ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்தரப்பின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்களின் வசதிக்காக கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றிற்கு பயணிக்க 17 பேட்டரி கார், 10 பேட்டரி பஸ், 2 டீசல் பஸ் என 29 வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் கிஸ் கால், கண்ணப்பன் ஐயன் அண்ட் ஸ்டீல் தனியார் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் சார்பில் 23 பேர் அமரக்கூடிய 2 பஸ்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ.17. 25 லட்சம் மதிப்புள்ள பஸ்களை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். தொடர்ந்து, பாதவிநாயகர் கோயில் அருகே ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூரைச் சேர்ந்த கேட்ஸ் வேர்ஸ் நிறுவனம் அமைத்த எல்.இ.டி., போர்டை பக்தர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.