/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிேஷகம் குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிேஷகம்
குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிேஷகம்
குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிேஷகம்
குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 06, 2025 03:07 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் - நத்தம் ரோடு குள்ளனம்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நாகல்நகர் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியப்பட்ட இக் கோயில் கும்பாபிேஷக விழா ஜூன் 3ல் ஸ்ரீவிக்னேஷ்வ பூஜையுடன் தொடங்கியது.
அன்று மாலை 5:00 மணிக்கு பிரவேச பலி, ம்ருத்ஸங்க்ரஹனம் உட்பட பல்வேறு பூஜைகளுடன் முதல்கால யாகபூஜை நடந்தது.
நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு திருமுறை, 2 ம் கால யாக பூஜை , காலை 10:00 மணிக்கு விமான ஸ்துாபி பிரதிஷ்டை நடந்தது. மாலை 4:00 மணிக்கு 3ம் காலை பூஜை உட்பட ேஹாமங்கள் நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு திருமுறை, திவ்பந்த பாராயணம் உட்பட 4ம் கால யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து கடம்புறப்பாடாக காலை 9:35 மணிக்கு கலசங்களில் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிேஷகம் நடந்தது. பேரூர், சிரவை, திண்டுக்கல், சென்னமலை ஆதினங்கள், அமைச்சர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன், எம்.எல்.ஏ., செந்தில்குமார், மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, மேனேஜிங் டிரஸ்டி கண்ணன், நாகல்நகர் சவுராஷ்டிர சபை தலைவர் அருள்ஜோதி, உப தலைவர் முரளிதரன், செயலர் சாந்திலால், பொருளாளர் ரவீந்திரநாத், சிவபாலாஜி ஸ்டீல்ஸ் உரிமையாளர்கள் சுப்பிரமணியன், சிவப்பிரகாஷ், பாலவிக்னா ஸ்விங் மில்ஸ் உரிமையாளர் பிரபு, சுபம் பேப்ரிக்ஸ் உரிமையாளர் சிவராம், கிருஷ்ணமூர்த்தி பர்ம் உரிமையாளர் ஆனந்தன், ஜே.டி. ,லெதர்ஸ் உரிமையாளர் டில்லிபாபு, சுபம் கிரியேசன் உரிமையாளர் மோகன்ராம் கலந்து கொண்டனர்.உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலையில் உபயதாரர்களை கவுரவித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சவுராஷ்டிர சபை நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர்.