/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மக்கும் பயோ பிளாஸ்டிக்: திண்டுக்கல்லில் புதிய முயற்சி மக்கும் பயோ பிளாஸ்டிக்: திண்டுக்கல்லில் புதிய முயற்சி
மக்கும் பயோ பிளாஸ்டிக்: திண்டுக்கல்லில் புதிய முயற்சி
மக்கும் பயோ பிளாஸ்டிக்: திண்டுக்கல்லில் புதிய முயற்சி
மக்கும் பயோ பிளாஸ்டிக்: திண்டுக்கல்லில் புதிய முயற்சி
ADDED : ஜூன் 06, 2025 03:07 AM

திண்டுக்கல்:மரம் வளர்ப்பு முறையில் முதன்முறையாக மக்கும் பயோ பிளாஸ்டிக் முறையை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.
மரம் வளர்ப்பிற்காக பிளாஸ்டிக் பாலிதீன் பையில் மண் சேகரிக்கப்பட்டு விதைகள் இட்டு செடியாக வளர்க்கப்படும். மரம் நடும்போதுபோது மண்ணை சுற்றியஇந்த பாலி பேக்கை கிழித்து விட்டுதான் பூமியில் நட முடியும். சில நேரங்களில் அடிப்பகுதி பிளாஸ்டிக்கை மட்டும் கிழித்து விட்டு செடியை நட்டு விடுவர். இதுபோன்ற சூழல்களின் போது பிளாஸ்டிக் தடிமன் காரணமாக வேர் சரியாக பிரிந்து செல்வதில் சிரமம் இருக்கும். அதோடு இந்த வகை பிளாஸ்டிக் ஹெச்.டி.பி.இ., எனும் உயர் அடர்த்தி பாலிஎதிலீன் வகையை சார்ந்தது. இவை எளிதில் மக்காது. இதனால் சாதாரண பிளாஸ்டிக் போல சுற்று சூழலும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் வேளாண் பாலி பேக் போன்றே மக்கும் தன்மையுடைய பயோ பிளாஸ்டிக் பையில் மண் சேகரித்து விதையிட்டு செடியாக வளர்க்கும் பணியில் மாவட்டம் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்த பயோ பிளாஸ்டிக் 90 நாட்களுக்குள் மக்கும் தன்மை கொண்டவை. இவற்றை பி.எல்.ஏ., பிளாஸ்டிக் வகைகள் என்பர். தாவர வளங்களிலிருந்து, குறிப்பாக சோள மாவு, தட்டை போன்ற மாவுச்சத்துக்களிலிருந்து இந்த வகை பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சுழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் சரவணன் கூறியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த பயோ பிளாஸ்டிக் முறையை பயன்படுத்தி உள்ளோம். வரும் காலங்களில் செடிகள் வளர்ப்பு முழுவதும் இம்முறையிலே பின்பற்றப்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க இது போன்ற முயற்சிகள் அவசியம் என்றார்.