/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வெயிலின் தாக்கத்தால் குறையும் ஆத்துார் அணை நீர்மட்டம் வெயிலின் தாக்கத்தால் குறையும் ஆத்துார் அணை நீர்மட்டம்
வெயிலின் தாக்கத்தால் குறையும் ஆத்துார் அணை நீர்மட்டம்
வெயிலின் தாக்கத்தால் குறையும் ஆத்துார் அணை நீர்மட்டம்
வெயிலின் தாக்கத்தால் குறையும் ஆத்துார் அணை நீர்மட்டம்
ADDED : ஜூன் 06, 2025 03:07 AM
ஆத்துார்: ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதியில் மழையின்றி தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சித்தரேவு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, மணலுார், புல்லாவெளி பகுதியில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் உள்ளிட்ட சில இடங்களில் சில தினங்களுக்கு முன்ப சாரல் மழை இருந்தது.தற்போது மலைக் கிராமங்களில் மழையின்றி அக்னி காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.
இவற்றை நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் 2024ல் 5 முறை நிரம்பி மறுகால் சென்றது. தற்போது வாய்க்காலின் வரத்து நீர் இல்லாததால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கூழையாறு, சிற்றாறுகளிலும் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.