ADDED : செப் 18, 2025 06:26 AM
வேடசந்துார் : அரியபந்தம்பட்டியை சேர்ந்தவர் ஹிந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் மணிகண்டன் 43. தனியார் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்கு சென்ற மணிகண்டனை சிலர் தாக்கினர். போலீசார் முறையான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வேடசந்தூர் வடமதுரை ரோட்டில் கட்சி நிர்வாகிகள் மறியலில் ஈடு பட்டனர்.
நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.