ADDED : செப் 18, 2025 06:26 AM
வத்தலக்குண்டு : விருவீடு அருகே கோபாலபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 30.
மதுரை மாவட்டம் உத்தப்ப நாயக்கனுார் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நான்கு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். செப். 12ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இன்ஸ்பெக்டர் சர்மிளா விசாரிக்கிறார்.