ADDED : செப் 19, 2025 02:14 AM
பழநி: திருவண்ணாமலையிலிருந்து 100 , விழுப்புரத்தில் இருந்து 100 என 200 பக்தர்கள் செப். 16 ல் ஹிந்து அறநிலை துறை அறுபடைவீடு தரிசன பயணத்தை துவங்கினர்.
திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்தபின் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் முடித்து பழநி வந்தனர். நேற்று காலை தரிசனம் பின் மதுரை சோலைமலை முருகன் கோயில் அழகர் கோயில்களில் தரிசனம் செய்தப்படி திருச்செந்துார் சென்றனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம், சுவாமி மலையில் தரிசனம் செய்கின்றனர்.