ADDED : செப் 19, 2025 02:14 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் தாழையூற்றில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்.
புஷ்பத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வராணி, பா.ஜ., முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன், கிருஷ்ணகுமார், ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க., நகர இணை செயலாளர் சரஸ்வதி, கொக்கரக்கல்வலசு கோபி ஆகியோர் ஆதரவாளர்களுடன் அந்தந்த கட்சியில் இருந்து விலகி தி.மு.க., வில் இணைத்துக் கொண்டனர்.
தாழையூற்று த.வெ.க.,வை சேர்ந்த 10 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். தி.மு.க.,ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, பொன்ராஜ், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டனர்.