/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பலாமே; அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பலாமே;
அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பலாமே;
அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பலாமே;
அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பலாமே;
ADDED : ஜூன் 19, 2024 06:34 AM

மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ,ஊராட்சிகளில் துணை சுகாதார நிலையங்கள், வட்டார, தாலுகா மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மருத்துவர் பணியிடங்கள் காலியாகவே உள்ளதால் டாக்டர்கள் மாற்றுப் பணியிடங்களுக்கு தற்காலிகமாக பணிக்கு சென்று வருகின்றனர். வட்டார மருத்துவமனைகளில் இரவு நேர பணிக்கென டாக்டர்கள் நியமித்திருந்தும் பெரும்பாலான மருத்துவமனைகளில் இரவு பணியில் இருப்பதில்லை. பல நேரங்களில் இரவு காவலாளி , வாட்ச்மேன் ஆகியோர்தான் நோயாளிகளுக்கு முதலுதவி செய்து மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இத்தகைய தவறான மருத்துவ சேவைகளால் பாதிக்கப்படுவது பொதுமக்களே.
ஒவ்வொரு நிதியாண்டிலும் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. ஆனால் வட்டார மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளாக இருந்த காலியிடங்கள் அப்படியே இருக்கின்றன. ஓய்வு பெறுபவர்களின் காலியிடங்களும் நிரப்பப்படுவதில்லை. இதனால் அவசர உதவிக்கு அரசு மருத்துவமனைகளை நாடுபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு காலிபணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.